இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும்!

0
141

மேஷம்

என்று தங்களுடைய நிதி நிலை அதிகரித்து நிம்மதி அதிகரிக்கும் நாள், கருத்து வேறுபாடுகள் நீங்கும், சரியான சமயத்தில் நீங்கள் செய்த உதவியை நண்பர்கள் பாராட்டுவார்கள், உத்யோகத்தில் உங்களுடைய கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள், திட்டமிட்டபடி எதையும் செய்யமுடியாது, சேமிப்பில் சற்றே கரையலாம், எப்படியும் முடிவடைந்துவிடும் என்று நினைத்த பணி முடியாமல் போகலாம்.

மிதுனம்

இன்று தங்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும் நாள், கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு நண்பர்கள் உதவியாக இருப்பார்கள், அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணிகளை மறுபடியும் தொடங்குவீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு வெகு நாட்களாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த காரியங்கள் தானாக நிறைவடையும் நாள். வாகன மாற்றம் செய்வது தொடர்பாக சிந்திப்பீர்கள், அஞ்சல் வழித்தகவல் நெஞ்சம் மகிழ வைக்கும் விதமாக இருக்கும், தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு முக்கிய நபர்களால் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், உடன்பிறப்புகள் மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெறும், பிரியமான சிலரை தேடி சென்று சந்திப்பீர்கள் நிதிநிலையில் ஏற்பட்ட சிக்கல் அகலும்

கன்னி

இன்று தங்களுக்கு வாக்கு சாதுரியம் காரணமாக, வளம் காணும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம், வீடு வாங்கும் முயற்சி பலன் கொடுக்கும்.

துலாம்

உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள், தடைகள் விலக தைரியமாக முடிவுகளை மேற்கொள்வீர்கள். சில சமயங்களில் பொறுமையை கடைபிடிப்பது மிகவும் நன்று, உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், வெற்றி செய்திகள் வீடு தேடி வரும், வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும், தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள், புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும், நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும், உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

மகரம்

இன்று தங்களுடைய நம்பிக்கைகள் யாவும் நடைபெறும் நாள், நட்பால் நன்மை கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய பங்குதாரர்களை இணைக்க முன்வருவீர்கள், திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

கும்பம்

இன்று தங்கள் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள், நீண்டதூரப் பயணங்களால் பலன் கிடைக்கும். குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் நீங்கும் உத்தியோக உயர்வு தொடர்பாக தகவல் வந்து சேரும்.

மீனம்

இன்று தங்களுக்கு நல்ல காரியங்கள் யாவும் நடைபெறும் நாள். சேமிப்பு உயர சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும், தொழில் முன்னேற்றம் ஏற்படும், நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவிற்கு வரும்.