நீங்க இந்த ராசியா! அப்படின்னா இன்னிக்கு உங்களுக்கு விசேஷம் தான்!

0
59

மேஷம்

நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று நல்லதொரு முடிவுக்கு வரும் நாள், தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியடைவீர்கள் தொழில்வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும், தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும், திருமணப்பேச்சுக்கள் முடிவாகலாம்.

ரிஷபம்

இன்று தாங்கள் அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் காரணமாக, மனக்கலக்கம் உண்டாகும் நாள், தொழில் ரீதியாக மறைமுக போட்டிகள் ஏற்படும், எடுத்த காரியங்களை நிறைவேற்ற மிகப்பெரிய பிரயாசை எடுக்க நேரிடும் சூழ்நிலை அமையும்.

மிதுனம்

இன்று தாங்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள், திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும், தொழில் முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

கடகம்

இன்று தங்களுடைய வளர்ச்சிகள் அதிகரிக்கும் நாள், பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உதாசீனப்படுத்தியவர்களே உங்களை உதவி கேட்டு நாடி வருவார்கள், பழைய பிரச்சனை படிப்படியாக மாறும், உத்தியோக மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள்.

சிம்மம்

இன்று வந்து உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாக திகழ்வீர்கள், ஆதாயம் கொடுக்கும் காரியங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் நாள், எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும் திருமண கனவுகள் நனவாகலாம், நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவிற்கு வரும்.

துலாம்

இன்று தங்களுடைய எதிரிகள் உதிரியாகும் நாள், குடும்ப ஒற்றுமை வலுப்படும், பரிமாற்றத்தில் ஆதாயம் கிடைக்கும், கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரலாம், உத்தியோக மாற்றம் உறுதியாகலாம் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும் நாள், நிகழ்காலத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும், நாடாளும் நபர்களின் நட்பால் நன்மை ஏற்படும் வாரிசுகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

தனுசு

விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் அக்கறை கூடும் நாள், வீட்டில் சுப காரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம், வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள், தைரியமும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும். தலைமைப் பொறுப்புகள் தானே வந்து சேரலாம், அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

கும்பம்

இன்று பரிமாற்றம் ஒழுங்காகும் நாள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள், திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரலாம், குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்

இன்று பயணங்களால் பலன் கிடைக்கும் நாள், தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை, அரசு பணிக்காக செய்த முயற்சி கைகூடலாம் .