இந்த ராசிக்காரர்களுக்கு தொலைபேசியின் மூலமாக இனிமையான செய்தி வரும்!

0
81

மேஷம்

இன்று சுபச்செய்திகள் வந்து சேரும் நாள், துணிச்சலும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும். வெகுநாளைய எண்ணம் நிறைவேறும். திருமண பேச்சு வார்த்தைகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும், வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள், எதிர்கால நலன் கருதி புதிய முடிவை மேற்கொள்வீர்கள். இடம், பூமி, சேர்க்கையுண்டு கேட்ட இடத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

மிதுனம்

இன்று தாங்கள் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள், தொழில் முயற்சி உள்ளிட்டவற்றுக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள், உத்தியோகத்தில் தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு அன்றாட பணிகளில் இருந்த தடை நீங்கும் நாள், ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க உணவில் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நன்று, பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசும் சூழ்நிலை உண்டாகலாம்.

சிம்மம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், மறதியால் நின்றுபோன பணியொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும், பாசமிக்க நண்பர்கள் நெஞ்சம் மகிழும் விதமாக உதவி செய்வார்கள்.

கன்னி

இன்று தங்களது தொலைபேசியின் மூலமாக பொன்னான செய்திகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புண்டு. வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும், உத்தியோகம் தொடர்புள்ள விஷயங்களில் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும், வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு அதிகாலையிலேயே இனிமையான செய்திகள் வந்து சேரும் நாள், புதிய முயற்சி வெற்றி பெறும், குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள், எவ்வாறு நடக்குமோ என நினைத்த காரியம் நல்லபடியாக நடைபெறும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் விஐபி சந்திப்பு வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகி மகிழ்ச்சிப்படுத்தும், நண்பர்கள் நல்லதொரு தகவலை கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

தனுசு

இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள், வாரிசுகளால் பெருமை உண்டாகும், வீட்டை சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய வேலைகளை செய்வதில் மும்முரம் காட்டுவீர்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள், நல்லவர்களின் தொடர்பு நீடித்திருக்கும், வாகன மாற்றம் செய்யலாமா? என்ற சிந்தனை அதிகரிக்கும் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

கும்பம்

இன்று ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், அலைச்சல் அதிகரிக்கும் பயணங்களை மாற்றியமைப்பீர்கள், ஆதாயம் எதிர்பார்த்தபடி இருக்காது, சில நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் செல்வதற்கான வாய்ப்புண்டு.

மீனம்

இன்று தங்களுக்கு தொலைபேசி மூலமாக இனிமையான செய்தி வந்து சேரும் நாள், உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள், ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடையும் வாய்ப்புண்டு தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.