இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வி.ஐ.பிக்களின் சந்திப்பு கிடைக்கும்!

0
59

மேஷம்

நீங்கள் வெகு நாட்களாக தேடிக் கொண்டிருந்த வேலை இன்று திடீரென்று கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள். தொழிலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தொலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் வந்து சேரும்.

ரிஷபம்

இன்று தாங்கள் எடுக்கும் புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள், பரிமாற்றம் ஒழுங்காகும், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தொழிலில் முன்னேற்றமடைவீர்கள் ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்

இடம், பூமி, வாங்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும் புதிய நண்பர்களால் பொருளாதார நிலை அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நன்று.

கடகம்

இன்று தங்களுடைய எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்லும் நாள், எதிர்பாராத தொகை வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும், போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள், உத்யோகத்தில் உங்களுடைய திறமைக்குஅங்கீகாரம் கிடைக்கும்.

சிம்மம்

வாய்ச்சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள், துணிச்சலுடன் எடுத்த முடிவுகளால் வெற்றி தன் வசமாகும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும், கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கன்னி

இன்று தாங்கள் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், செயல்படும் நாள், பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். பாதியில் நின்ற பணிகள் மறுபடியும் ஆரம்பமாகும், குடும்பத்தில் நிலவி வந்த வார்த்தை யுத்தம் சுமூகமாக முடிவடையும்.

துலாம்

இன்று தங்களுக்கு வாரிசுகள் வழியே பெருமைக்குரிய செய்தி கிடைக்கும் நாள், எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை வகுப்பீர்கள். பொருளாதார நிலை அதிகரிக்கும், அன்பான நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள், வருமானத்தைவிட செலவுகள் அதிகரிக்கும், தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும். மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை தவிர்ப்பது நல்லது, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது.

தனுசு

இன்று தங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும் நாள், புகழ் மிக்கவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் விலகும், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

மகரம்

இன்று தங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள், விழிப்புணர்வுடன் செயல்படுவது மிகவும் நல்லது, தனவரவு தாமதமாகும், வீட்டிற்கு தேவைப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள் முன்கோபத்தை சற்றே குறைத்துக் கொள்ளவும்.

கும்பம்

இன்று தங்களுக்கு அதிகாலையிலேயே ஆதாயம் கொடுக்கும் தகவல் வந்து சேரும் நாள், உத்தியோக முயற்சி கைகூடும். பொருளாதார நிலை அதிகரிக்கும், உதவி செய்வதாக தெரிவித்தவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

மீனம்

இன்று தாங்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் நாள், உடன்பிறப்புகள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்கள் விலகி சென்றாலும் புதியவர்கள் வந்திணைவர், விஐபிகளின் சந்திப்பால் விருப்பம் நிறைவேறும்.