இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை அதிகரிக்கும்!

0
107

மேஷம்

இன்று கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் நல்லதொரு முடிவுக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கலாம், வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புண்டு உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சில வேலைகளை உங்களுடைய பார்வையிலேயே முடிப்பது மிகவும் நன்று. அடுத்தவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம், வாரிசுகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம், சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம், வியாபாரத்தில் ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது, உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் நீங்கும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

வாரிசுகள் உங்களுடைய அறிவுரைகளை ஏற்றுக் கொள்வார்கள் மனைவிவழியில் மதிப்பு அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும், வாகனத்தை சீர் செய்வீர்கள் எதிர்பாராத தனவரவு உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவி புரிவீர்கள் தங்களுள் இருக்கும் திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்

இன்று தங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் ஏற்படும், வழக்கில் வெற்றி கிடைக்கும், பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள் வியாபாரத்தில் அனுபவமிக்க நபர்களை தேடுவீர்கள், உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஆச்சரியப்படுமாறு நடந்து கொள்வீர்கள்.

சிம்மம்

எதிர்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வாரிசுகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள் சிக்கனமாக செலவு செய்து சேமிக்க ஆரம்பிப்பீர்கள். உறவினர்களால் அன்புத் தொல்லை வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவத்ற்கான வாய்ப்புண்டு உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னி

எதிர்பார்ப்புகள் அடங்கும் தாய்வழி உறவுகளால் பிரச்சனை வந்து செல்லும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கலாம், பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளித்துக் கொள்வீர்கள் வியாபாரத்தில் புது பங்குதாரரை இணைப்பீர்கள் உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

திடமாக சில முக்கிய முடிவுகளை மேற்கொள்வீர்கள் வாரிசுகளின் பேச்சில் முதிர்ச்சி நன்றாக தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள், அரசால் ஆதாயம் ஏற்படும் புது வாகனம் வாங்குவீர்கள் வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை வகுப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள் தைரியம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

கடனாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி செலுத்துவீர்கள் சகோதர வகையில் நன்மை ஏற்படும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள், வியாபாரத்தில் வேலையாட்கள் தங்களுக்கு மதிப்பளிப்பார்கள் உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் திடீர் திருப்பம் உண்டாகும் நாள்.

தனுசு

இன்று தங்களுடைய ராசிக்குள்ளேயே சந்திரன் இருப்பதால் தாங்கள் சிலருக்கு நல்லது நினைத்தாலும் அது தவறாக போய் முடியும். நண்பர்கள் உறவினர்களுடன் உரிமையியல் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள், வியாபாரத்தில் குறைவாக இருக்கும் உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும் கவலை நீங்கும் நாள்

மகரம்

குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் இன்று அனுசரித்து பேசுவது மிகவும் நன்று. யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டாம், உறவினர்கள், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி தொந்தரவு கொடுக்கும், வியாபாரத்தில் புது முதலீடுகளை மேற்கொள்ளலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

இன்று தங்களுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும், பயணங்களால் ஆதாயம் ஏற்படும் கலந்தாலோசனை செய்து முடிவுகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொழில் ஆரம்பிக்க முயற்சி வெற்றியடையும் உத்தியோகத்தில் உங்களுடைய கை ஓங்கும்.

மீனம்

இன்று தங்களுடைய எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் நாள். உடன் பிறந்தவர்கள் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள், உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்புவார்கள் சிந்தனை திறன் அதிகரிக்கும் நாள்.