மேஷம்
சண்டை சச்சரவுகள் நீங்கி சமாதானம் பிறக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும், அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்று தங்களுக்கு வி.ஐ.பிக்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள். விரும்பிய காரியொன்றை செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும் விதமாக இருக்கும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்
இன்று தங்களுக்கு விடிந்தவுடனேயே பொன்னான தகவல் ஒன்று வந்து சேரும் நாள். வியாபார நலன்கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும், வாரிசுகளால் உண்டான தொல்லை நீங்கும்.
கடகம்
இன்று தாங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும் நாள். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறுவதற்கான வாய்ப்புண்டு பொது வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் வந்து சேரும், பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்
இன்று தங்களுக்கு உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று தொடர்வீர்கள் மங்கல நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம்.
கன்னி
இன்று தங்களுக்கு உதிரி வருமானங்கள் அதிகரிப்பினால் உறவினர்களுடன் ஒத்துழைப்புடன் ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள், உடனிருப்பவர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை ஏற்படும்.
.
துலாம்
இன்று தங்களுடைய சேமிப்புகள் யாவும் கரையும் நாள். தொழில் போட்டிகள் அதிகரிக்கலாம், வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடும், நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
விருச்சகம்
இன்று தங்களுடைய புகழும், பாராட்டும், அதிகரிக்கும் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும் உத்யோகத்தில் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
தனுசு
இன்று தங்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்ச்சியடையும் நாள். தொலைபேசி மூலமாக பொன்னான தகவல்கள் வந்து சேரும். வாரிசுகளால் விரையம் ஏற்படும் குடியிருக்கும் வீட்டால் உண்டான பிரச்சனைகள் நீங்கும்.
மகரம்
இன்று தங்களுக்கு தகராறுகள் தானாக வரும். பணவிரயம் ஏற்படும் விழிப்புணர்வுடன் செயல்படுவது மிகவும் நன்று, உறவினர்கள் பகை ஏற்படும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம்.
கும்பம்
இன்று தங்களுக்கு யோகமான நாள். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றலாம், விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள் மாலை சமயத்தில் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும்.
மீனம்
இன்று தங்களுடைய சோகங்கள் யாவும் கரைந்து சுகம் கூடும் நாள். சுணக்கத்துடன் நின்ற காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தொலைதூர உறவினர்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பார்கள் மாற்றினத்தவர்களின் மூலமாக செய்த உத்தியோக முயற்சி கைகூடும்.