இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்!

0
84

மேஷம்

இன்று தாங்கள் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை வகுப்பீர்கள். அதன் மூலமாக வெற்றியடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு சுகர் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு சுப செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாரிசுகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை வழங்கும்.

கடகம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை ஏற்படும். வாரிசுகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நபர்கள் அறிமுகத்தால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி

இன்று தாங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலமாக எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். திருமணம் தொடர்பான காரியங்களில் அனுகூலமான பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம்

இன்று வியாபார முன்னேற்றத்திற்காக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டார நட்பு உருவாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

தனுசு

இன்று எங்களுக்கு வியாபாரத்தில் நண்பர்களின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து கருத்து வேறுபாடுகள் மீண்டும் எந்த செயலிலும் சுறுசுறுப்புடனும், புது தென்புடனும் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை வழங்கும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று தாங்கள் தேவையில்லாத மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டி வரும். வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகலாம். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்கள் மூலமாக பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

இன்றைய தினம் எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் தங்களுடைய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். இதுவரையில் வராத கடன்கள் வசூலாகும். பொன், பொருள் சேரும். வாரிசுகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மீனம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி நல்ல மகிழ்ச்சியடைவீர்கள். உறவினர்கள் மூலமாக சுபச்செய்திகள் நண்பர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.