இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி அதிகமாக காணப்படும்!

0
76

மேஷம்

இன்று தாங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வாரிசுகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீக்கும். தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை வழங்கும் சுப பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வங்கி சேமிப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று தாங்கள் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பூர்வீக சத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையில் உடன் பணியாற்றுபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறைவதற்கான வாய்ப்பு உண்டு.

கடகம்

இன்று தங்களுக்கு மன அமைதி நிலவும் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவார்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று தங்களது குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். வாரிசுகளுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலமாக சிக்கல்கள் குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வாரிசுகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். பூர்விக சொத்துக்களால் லாபகரமான பலன் கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்றம் நன்றாக இருக்கும். அனுபவம் உள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு செய்யும் பணியில் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உறவினர்கள் தங்களுடைய வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பார்கள். வாரிசுகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு சுபச் செலவுகள் ஏற்படும். சகோதர சகோதரிகள் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் யாவும் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். தோளில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

இன்று தங்களுக்கு வரவும், செலவும் சமமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களை அனுசரித்து செல்வது நன்று. புத்தி வஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் இருப்பவர்களின் உதவியால் எளிதில் செய்து முடிக்க இயலும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

கும்பம்

இன்று தங்களுடைய ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீர் சுப செய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்

இன்று தாங்கள் எந்த செயலையும் மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வாரிசுகள் பொறுப்புடன் இருப்பார்கள். திருமண சுப முயற்சிகள் ஆரம்பிக்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும் பொன் பொருள் சேரும்.