இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும் நாள்!

மேஷம்

இன்று தங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். அலுவலகம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. வேலையை சரியான நேரத்தில் முடிக்க இயலாததால் கவலையடைவீர்கள்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உங்களுடைய கனவுகள் நினைவாகும். அலுவலகத்தில் தங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தங்களுடைய வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக உரையாற்றுவீர்கள்.

மிதுனம்

இன்று தாங்கள் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் பணி சுமை அதிகரித்து காணப்படும். தங்கள் வாழ்க்கை துணையுடன் கோபப்படாமல் பொறுமையுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.

கடகம்

இன்று தாங்கள் ஆலய வழிபாட்டின் மூலமாக அமைதி காண வேண்டிய நாள். தங்களுக்கு வேலைப்பளு குறைவதற்கு ஒவ்வொன்றிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். தங்களுக்கு மன அமைதி குறையும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு சாதகமற்ற நாளாக இருக்கும். சொல்லிக் கொள்ளுமளவிற்கு சாதகமான பலன் இருக்காது. அலுவலகம் தங்களுக்கு சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். தொழில் மற்றும் பணி இடங்களில் சிறந்து விளங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் அதீத நட்புடன் பழகுவீர்கள்.

துலாம்

இன்று தாங்கள் சுறுசுறுப்புடன் செயல்படும் நாள். அலுவலகத்தில் தங்களுடைய முழு திறமையை கொண்டு பணியாற்றுவீர்கள்.

விருச்சிகம்

இன்று தாங்கள் இறை வழிபாட்டின் மூலமாக நற்பலன்களை பெற வேண்டிய நாள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்படுவதால் நன்மைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு இடைவேளை வந்து நீங்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு மன குழப்பம் அதிகரிக்கும் நாள். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கணவன், மனைவிக்கிடையே சமூகமான உறவு இருக்காது.

மகரம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள். தங்களுடைய விருப்பங்கள் யாவும் நிறைவேறும். பணியிடத்தில் வேலைகளை குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடித்து விடுவீர்கள்.

கும்பம்

இன்று தாங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் தங்களுடைய திறமையை வெளி காட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். மேலதிகாரிகள் தங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.

மீனம்

இன்று தாங்கள் எதிலும் கவனமுடன் இருப்பது மிகவும் நன்று. அலுவலகத்தில் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

">
Exit mobile version