5-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
80

மேஷம்

இன்று தங்களுக்கு இனிய வாழ்க்கை அமைவதற்கு ஈஸ்வரனை வழிபட வேண்டிய நாள். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள், வெகுநாளைய எண்ணம் நிறைவேறும், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாலை நேரம் மகிழ்ச்சியான தகவல் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு.

ரிஷபம்

இன்று தாங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள், வரவை விடவும் செலவுகள் அதிகரிக்கும். புதுமையான முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது, பயணங்களில் விழிப்புணர்வு தேவைப்படும். உத்தியோகத்தில் கெடுபிடி நிலை அதிகமாக இருக்கும்.

மிதுனம்

இன்று தாங்கள் கோவில் வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், சுப விரயங்கள் உண்டாகும். கொடுத்த வாக்கை செயலாக்கி காட்டுவதில் தாமதம் உண்டாகலாம். மறதியின் காரணமாக, சில காரியங்களை செய்யாமல் விட்டுவிடுவீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். வீடு, நிலம், வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் சலுகை எதிர்பார்த்தபடியே இருக்கும் உத்தியோக மாற்றத்திற்கு செய்த ஏற்பாடு பலன் கொடுக்கும்.

சிம்மம்

இன்று தாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடையும் நாள். வருமானம் அதிகரிப்பதற்கு வழி என்ன என யோசிப்பீர்கள், தபால் மூலமாக அனுகுலமான தகவல்கள் வந்து சேரும். பஞ்சாயத்துக்கள் நல்லதொரு முடிவிற்கு வரும்.

கன்னி

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க சிவபெருமானை வழிபட வேண்டிய நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள், நேற்று வரையில் நடைபெறவில்லையே என்று நினைத்த ஒரு காரியம் இன்று நிறைவேறும்.

துலாம்

இன்று தங்களுக்கு சுப காரிய பேச்சுக்கள் முடிவாகும் நாள். தொழிலில் அடுத்தவர்களின் குறுக்கீடுகள் நீங்கும், பரிமாற்றத்தை சரி செய்து கொள்வீர்கள் இடம், பூமி, விற்பனையால் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வாழ்வு சிறப்பாக அமைவதற்கு சிவபெருமானை வழி பட வேண்டிய நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும், வாரிசுகளால் பெருமை சேரும், கோவில் திருப்பணிக்கு கொடுக்க வேண்டும் என்று விருப்பம் கொள்வீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு தடைகள் யாவும் நீங்கும் நாள். தாராளமாக செலவிட வேண்டும் என நினைப்பீர்கள். தொலைபேசி வழியில் உறவினர்கள் ஆதரவு கிடைக்கும், சிறிய விஷயங்களை பெரிது படுத்தாமலிருப்பது மிகவும் நன்று.

மகரம்

இன்று தங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் நாள். மற்றவர்களுக்கு பண பொறுப்புகள் செல்லும் பொழுது யோசித்து செயல்படுவது நன்று. நேற்று முன்தினம் உண்டான பிரச்சனை இன்று நல்லதொரு முடிவுக்கு வரும், திருமண கனவுகள் நனவாகும்

கும்பம்

இன்று தங்களுக்கு பணப்பழக்கம் அதிகரிக்கும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். தொலைபேசி வழி தகவல் அனுகுலமாக இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள் வீடு கட்டும் முயற்சி வெற்றி பெறும்.

மீனம்

இன்று தங்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மையால் விரோதம் விளக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை மாலை நேரம் மங்கலமான தகவல்கள் வந்து சேரும்.