இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள்!

0
53

மேஷம்

இன்று தங்களுக்கு நல்ல வாய்ப்பு இல்லம் தேடி வரும் நாள், உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியடையும். வீட்டு பராமரிப்பில் ஆர்வத்துடன் காணப்படுவீர்கள், கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு விரயம் அதிகரிக்கும் நாள், வீடு மாற்ற சிந்தனை தோன்றலாம், நண்பர்களால் நல்ல காரியங்கள் நடந்தேறும், வரன்கள் வாயில் தேடி வரலாம், புதிய தொழில் ஆரம்பிப்பது தொடர்பாக சிந்திப்பீர்கள்.

மிதுனம்

இன்று தாங்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் நாள், தங்களிடம் அன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள், உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

கடகம்

இன்று தாங்கள் நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள், நிலையான வருமானத்திற்கு வழி செய்து கொள்வீர்கள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும், அரசியல்வாதிகளால் நன்மை ஏற்படும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள், வியாபார சிக்கல்கள் நீங்கும் சாமர்த்தியமான பேச்சால் சாதனை படைப்பீர்கள், வாகன மாற்றம் செய்வது தொடர்பாக சிந்திப்பீர்கள்.

கன்னி

இன்று தாங்கள் சந்தித்தவர்களிடம் சிந்தித்து பேச வேண்டிய நாள், செலவுகள் இருந்தாலும் அதனை ஈடு செய்வதற்கான வரவுகள் வரும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும், கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

துலாம்

இன்று தங்களுக்கு எண்ணம் போல அனைத்தும் நடைபெறும் நாள், எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். இதுவரையில் வராத உறவினர்கள் சிலர் இல்லம் தேடி வரலாம், உத்தியோக முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு செல்வ நிலை அதிகரிக்கும் நாள். செல்வாக்கு மேலோங்கும், தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு இருக்கும், குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு நற்செய்தி வந்து சேரும் நாள், குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்றே அலைச்சல்களை சந்திக்க நேரலாம், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டியது அவசியமாகும்.

மகரம்

இன்று தங்களுக்கு ஒற்றுமை சிறப்பாக இருக்கும் நாள், நேற்றைய பிரச்சினையொன்று இன்றைய தினம் நல்லதொரு முடிவிற்கு வரும். பரிமாற்றத்தில் உண்டான குளறுபடிகள் நீங்கும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

கும்பம்

இன்று தாங்கள் வியக்கும் வகையிலான செய்தி வீடு வந்து சேரும் நாள். பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும், இளைய சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும், வீடு கட்டி குடியேற இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்

இன்று தங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள், செலவுகள் இருந்தாலும் அதனை ஈடு செய்யும் விதமாக வரவுகள் இருக்கும். உறவினர்கள் வழியில் உண்டான கருத்து வேறுபாடுகள் நீங்கும், கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும்.