இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

0
39

மேஷம்

இன்று தங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். பயணம் காரணமாக, பலன் கிடைக்கும். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வார்கள், குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வெற்றிகள் யாவும் வீடு தேடி வரும் நாள், பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது, நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவோடு கூட்டு முயற்சியில் பலன் கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் நாள், தட்டுப்பாடுகள் நீங்கும் பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடிவடையும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு யோகங்கள் யாவும் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டியதால் நாள், கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது, நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பு மறுபடியும் தங்களிடமே வந்து சேரலாம்.

சிம்மம்

இன்று தாங்கள் செலவுகளை சமாளிக்க வேண்டிய நாள், நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும், நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள், வரன்கள் வாயில் தேடி வரும்.

கன்னி

இன்று தாங்கள் சொல்லை செயலாக்கி காட்டும் நாள், துணிச்சலும் தன்னம்பிக்கையும், அதிகரிக்கும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வருவார்கள், பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனை நல்லதொரு முடிவிற்கு வரும்.

துலாம்

இன்று தங்களுக்கு நட்பால் நன்மைகள் கிடைக்கும் நாள், தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும், பெற்றோர் வழியில் பிரியம் அதிகரிக்கும், இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும், வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள், பயணங்கள் பலன் தருவதாக இருக்கும், பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும், மற்றவர்களுக்காக கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும், பொது வாழ்வில் புகழ் அதிகரிக்கும்.

தனுசு

இன்று தாங்கள் நினைத்த காரியங்கள் யாவும் எளிதாக நிறைவேறும் நாள், எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும், திருமண தடை நீங்கும், குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய குணமறிந்து நடந்து கொள்வார்கள்.

மகரம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், அரசு வழிச்சலுகைகள் கிடைப்பதற்கான அமைப்பு உண்டு முன்னோர் சொத்துக்களிலிருந்த பிரச்சனை நல்லதொரு முடிவிற்கு வரும், உத்தியோகத்தில் தடைபட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும்.

கும்பம்

இன்று தங்களுக்கு திருமண வாய்ப்பு கை கூடும் நாள், கனிவுடன் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள், வீடு மாற்ற சிந்தனை அதிகரிக்கும், முக்கிய பிரமுகர் ஒருவர் தங்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்.

மீனம்

இன்று தங்களுக்கு சந்தித்தவர்களாக சந்தோஷம் அதிகரிக்கும் நாள், குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும் எதிர்கால நலன் கருதி புதிய திட்டமொன்றை வகுப்பீர்கள்.