இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும் நாள்!

0
149

மேஷம்

இன்று தங்களுக்கு பாராட்டும், புகழும், அதிகரிக்கும் நாள், பண தேவைகள் பூர்த்தியாகும், ஆரோக்கியத்தில் உண்டான அச்சுறுத்தல்கள் நீங்கும், குடும்பத்திலிருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்

இன்று தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள், கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்புடன் செயல்படுவீர்கள், வீடு மாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் அதிகரிக்கும், உத்யோகத்தில் உங்களுடைய திறமை பளிச்சிடும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாள், சேமிப்பு கரையுமளவிற்கு செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பணப்பெறுப்புகளிலிருப்பவர்கள் கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம்.

கடகம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகரமான வாய்ப்புகளை சந்திக்கும் நாள், வருமானம் திருப்திகரமாக இருக்கும், புதிய தொழில் ஆரம்பிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும், வீட்டிற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

சிம்மம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், தடைபட்டு வந்த ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும், சொத்துக்களின் விற்பனையால் கணிசமான தொகை கைக்கு வரும், உத்தியோகத்தில் பணி நிரந்தரம் தொடர்பான தகவல் மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும்.

கன்னி

இன்று தாங்கள் பெரிய மனிதர்களின் சந்திப்பால் இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறும் நாள். அன்போடு பழகியவர்களின் ஆதரவு தங்களுடைய முயற்சிக்கு இருக்கும், திருமண கனவுகள் நினைவாகும், தந்தை வழி ஆதரவு கிடைக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள், எதிர்பார்த்த காரியம் எளிதில் நடந்து முடியும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள், திருமண பேச்சுக்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள், பொருளாதார வசதி அதிகரிக்கும், புதிய தொழில் ஆரம்பிக்கும் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வீர்கள், குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய குணமறிந்து நடந்து கொள்வார்கள்.

தனுசு

இன்று தங்களுடைய எண்ணங்கள் யாவும் எளிதில் நிறைவேறும் நாள், தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும், நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக்கொள்வீர்கள்.

மகரம்

இன்று தங்களுடைய செல்வ நிலை அதிகரிக்கும் நாள், வருமானம் திருப்திகரமாக இருக்கும், வாகன மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள், இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். சொத்து சேர்க்கைக்கான அறிகுறிகள் தோன்றும்.

கும்பம்

இன்று தங்களுக்கு வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள், தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்வில் உண்டான வீண் பழிகள் நீங்கும், பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும்.

மீனம்

இன்று தங்களுக்கு தொட்டது தொடங்கும் நாள், யோசிக்காமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். சகோதரத்தால் அனுகூலம் ஏற்படும், தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.