அந்த தொகுதியே வேண்டாம்! அதிரடி முடிவு திமுகவின் முக்கிய புள்ளி!

0
69

1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மு க ஸ்டாலின் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் அந்த இரண்டு சமயங்களிலும் திமுக ஆட்சியை கைப்பற்றியது என்பதுதான் இப்போதைய சலனத்திற்கு காரணமாக இருக்கின்றது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

1984ஆம் வருடம் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் மு க ஸ்டாலின் போட்டியிட்டார் அந்த முதல் முறையே அவர் தோல்வியைத் தழுவினார் அதன்பிறகு 1989-ஆம் ஆண்டு அதே ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 1991-ஆம் வருடம் தேர்தலில் மறுபடியும் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் அதனை அடுத்து மறுபடியும் 1996. 2001 மற்றும் 2006 என மூன்று முறை தொடர்ச்சியாக அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார் ஸ்டாலின்.

1996-ஆம் வருடம் சுமார் 70 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஸ்டாலின் 2001ஆம் வருடம் வாக்கு சதவீதம் 50 சதவீதமாக குறைந்து இருந்தாலும் ஸ்டாலின் வெற்றி பெற்றுவிட்டார் 2006 ஆம் ஆண்டு மறுபடியும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெறும் 46 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்று ஸ்டாலின் வெற்றி பெற்றார் அதன் பிறகு அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடவில்லை. இதற்கான காரணம் அங்கே வாக்கு சதவீதம் குறைந்துவிட்டதால் தான் என்று தெரிவித்தார்கள் அதன்பின்பு 2011-ம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு ஆகிய இரு தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றார் ஸ்டாலின்.

அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்று கேட்டால் இருமுறை ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி பெற்றிருந்தாலும் திமுகவால் ஆட்சிப் பொறுப்புக்கு வர இயலவில்லை இதன் காரணமாக கொளத்தூர் தொகுதி ராசியில்லாத தொகுதி என ஒரு சிலர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்து வருகிறார்களாம் அதேபோல ஸ்டாலின் வீட்டிலும் கூட இந்தமுறை கொளத்தூர் தொகுதி வேண்டாமே என்ற குரல் எழுந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது அதே நேரம் திமுக ஆட்சிக்கு வந்த 1996ஆம் ஆண்டு மற்றும் 2006ஆம் ஆண்டு மு க ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் எம்எல்ஏவாக ஆகி இருக்கின்றார் ஆகவே மறுபடியும் ஸ்டாலினை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடுமாறு அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கிறார்கள்.

அதேபோல ஒருசிலர் சென்னையை வேண்டாம் கருணாநிதியைப் போல திருவாரூர் தொகுதியில் போட்டியிடலாம் என தெரிவித்து வருகிறார்களாம் ஆனாலும் கருணாநிதி திருவாரூரில் 2011ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆனாலும் முதல்வராக ஆக இயலவில்லை ஆகவே திருவாரூர் தேவையில்லை என்று சிலர் தெரிவிப்பதாக சொல்கிறார்கள் சென்னையை பொறுத்தவரையில் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெற்று விடுவார் என்று தெரிவிக்கிறார்கள்.

அதிலும் கருணாநிதி வெற்றி பெற்று முதல்வரான சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகள் என்றால் சென்டிமென்டாக முதல்வர் பதவி தேடி வரும் என்று தெரிவிப்பதோடு அங்கே இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் இருப்பதால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று ஸ்டாலின் தரப்பு கணக்குப்போட்டு இருக்கின்றது ஆனாலும் 10 வருடகாலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கொளத்தூர் தொகுதியில் இப்போது வரை ஸ்டாலினுக்காக அடிமட்டம் வரையில் திமுகவினர் தேர்தல் பணிகளை செய்து வைத்திருக்கிறார்கள் அவ்வாறு இருக்கும்போது திடீரென்று தொகுதியை மாற்றினால் அதே போன்று ஒரு கட்டமைப்பை அந்த தொகுதியில் குறுகிய காலத்தில் ஏற்படுத்த இயலுமா எனவும் கட்சிக்காரர்கள் யோசித்து வருகிறார்கள்.

ஆனாலும் கருணாநிதி வெற்றி பெற்று முதல்வராக உதவிய ஏதாவது ஒரு தொகுதியை தான் ஸ்டாலின் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று சொல்கிறார்கள் அந்த வகையிலே இந்த முறை கொளத்தூரில் ஸ்டாலின் களமிறங்குவது சந்தேகம்தான் என்று தெரிவிக்கிறார்கள்.