தமிழகமே பரபரப்பாக இருந்த சமையத்தில் ஸ்டாலினை மட்டும் காணவில்லை!

0
110

நேற்றைய தினம் தமிழகம் முழுவதிலும் தமிழக சட்டசபைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது அதேசமயம் பெரிய அளவில் எங்கும் கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு.அதேபோல தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்.தேர்தல் ஆனையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அவ்வப்பொது அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச்சென்றனர்.ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியான நேற்றையதினம் சட்டசபை தேர்தல் காலை ஏழுமணிமுதல் இரவு ஏழுமணிவரை அமைதியான முறையில் நடந்தது.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுடன் முதலில் கலைஞர் நினைவிடம் சென்று அங்கே பிரார்த்தனை செய்து அதன்பின் வாக்குச்சாவடிக்கு வரவிருப்பதாக தெரிவித்ததால் அந்தப்பகுதியில்.கூட்டம்.கூடத்தொடங்கியது.அதே போல ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

அதன் பின் சுமார் ஒன்றரை மணி நேரம் ஸ்டாலின் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லையாம். இதனால் நிர்வாகிகள் அவரை தேட தொடங்கிவிட்டனர்.ஸ்டாலின் எங்கு சென்றார் என அனைவரும் தேடிக்கொண்டிருக்க ஸ்டாலினோ பிரஷாந்த் கிஷோரிட்ம் அவசர ஆலோசனை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.

அதோடு பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினிடம் சில முக்கிய விஷயங்களை எடுத்துரைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அவருடைய இந்த ஆலோசனைக்கு பின்னர் ஸ்டாலின் நேரடியாக தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்ற பின்னரும் கூட கட்சி நிர்வாகிகளுடன் பெரிய அளவில் அவரை எதுவும் ஆலோசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

சபரீசன் தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் அதிமுக டோக்கன் விநியோகம் குறித்து தகவல்களை சேகரித்து ஊடகங்களிடம் அது தொடர்பாக எடுத்துரைத்தார் என்று சொல்லப்படுகிறது..ஆனால் ஸ்டாலினின் இந்த அமைதியானது திமுக தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பதை எடுத்துக்கூறும் ஒரு சமிக்‌ஷையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதிலும் திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலக்கத்தில் இருந்து வருகிறார்கள்.