அதிமுக அமைத்த தேர்தல் வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!

0
65

முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையிலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் அமைச்சர்கள் இடையேயான ஆலோசனை கூட்டம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.

சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டால் வெளியே நிறுத்தி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுகவின் முன்னணி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த நிலையில் ஆளும் கட்சியான அதிமுக பாஜகவுடன் தான் கூட்டணி என்று அறிவித்து இருக்கின்றது அதோடு தேர்தலுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்தலுக்காக ஐந்து குழுக்களை அமைத்து இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக அதிமுகவின் தலைமை வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் வரும் பதினான்காம் தேதி அமைச்சர்கள் மாவட்டச்செயளாலர்கள் மண்டல பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிமுகவின் தலைமைக்கழகம் அறிவித்திருக்கிறது சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து இதில் ஆலோசிக்க இருப்பதாக சொல்கிறார்கள் .

கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் சம்பந்தமாக வழங்கப்பட்ட ஆலோசனைகளின்படி முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்பான விவரங்களுடன் இந்த கூட்டத்தில் பங்குபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது திமுக தரப்பில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் அதிமுக சார்பில் பிரச்சாரம் ஆரம்பிப்பது கூட்டணி மற்றும் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.