அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது

0
71

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

அசாமில் கடந்த 20 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு வீடுகள் தண்ணீரில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அங்கு 12 மாவட்டங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த மழைவெள்ளத்தில் சிக்கி பார்பேட்டா மாவட்டத்தில் ஒருவர் இறந்துள்ளார். 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த இயற்கை பாதிப்பில் இருந்து அசாம் மக்களை மீட்கும் முயற்சியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டும், பாதிக்கப்பட்ட இடங்களில் உணவுப் பொருட்களையும் வேகமாக வழங்கி வருகின்றனர்.

இந்த மழைவெள்ள விபத்தில் ஏற்கனவே பலர் உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்தமாக வெள்ள பாதிப்பில் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Jayachandiran