கவர்னர் மாளிகை அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் போலீசாருக்கும்  அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது!

0
144
#image_title

கவர்னர் மாளிகை அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் போலீசாருக்கும்  அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது!

ஆளுநர் மாளிகை அருகே அதிமுக தொண்டர்கள் பெருமளவில் குவிந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சண்முகத்தின் வாகனம் உள்ளே அனுமதிக்கப்படாமல் சிறிது நேரம் காக்க வைக்கப்பட்டது.மேற்கொண்டு  சி வி சண்முகம் கடும் டென்ஷன் ஆனார்.

தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக சார்பில் நேற்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. ஆளுநர் மாளிகை அருகே எடப்பாடி பழனிச்சாமி வந்தபோது உடன் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் வந்ததால் ஆளுநர் மாளிகை வாயிலருகே அதிமுக தொண்டர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் ஆளுநர் மாளிகைக்குள் சிவி சண்முகத்தின் கார் அனுமதிக்கப்படாமல் சிக்கிக்கொண்டது. இதனால் சிவி சண்முகம் டென்ஷன் ஆனார். தொண்டர்களை விலக்கிய பின்னர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் மாளிகைக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

புகார் அளித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்களுடைய கார்கள் மூலம் புறப்பட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆளுநர் மாளிகை வாயில் அருகே நின்றிருந்த மாநகர பேருந்தில் ஏறி சென்றார். இது அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

author avatar
Savitha