சபாநாயகருக்கே அதிகாரம் இருக்கிறது! போராட்டம் நடத்துவதில் என்ன நியாயம் டிடிவி தினகரன் கேள்வி!

0
99

கடந்த 17ஆம் தேதி தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இந்த கூட்டத்தொடரில் பல சட்ட நுண் வடிவுகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது இணையதள சூதாட்ட தடை சட்டமும் ஒன்று. இந்த இணையதள சூதாட்ட தடை சட்டத்திற்கு ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்த இந்த சட்டத்திற்கு கடந்த 1ம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

அதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தின் கணக்கு தணிக்கை குழு தன்னுடைய கணக்கு தணிக்கையை தாக்கல் செய்தது. மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் மிக முக்கியமான விவகாரமாக கருதப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் தன்னுடைய விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையின்படி ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவர் காப்பாற்றப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கியிருந்தாலும் அவர் காப்பாற்றப்பட்ட இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல்வேறு சந்தேகங்கள் இந்த அறிக்கையின் மூலமாக எழத் தொடங்கினர். அதோடு ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மீது இந்த அறிக்கையின் மூலம் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது, சட்டசபையில் சபாநாயகருக்கு தான் அதிகாரம் அதிக அளவில் இருக்கிறது. ஆனால் நாற்காலி பிரச்சனைகளுக்காக எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்? சபாநாயகரின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகளை பார்த்தால் பயந்து போய் பதட்டத்தில் இருப்பது போல தெரிகிறது என கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் உடன் பன்னீர்செல்வம் சந்தித்து பேசி உள்ளார் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வருகிறார் அது உண்மை என்றால் அதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஒரு முதல்வருக்கு முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக நிமிடத்திற்கு, நிமிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார் டிடிவி தினகரன்.

ஆனால் இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளாமல் அவர் தொலைக்காட்சியில் பார்த்து நிலைமையை தெரிந்து கொண்டேன் என்று தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிபதி தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தவறு செய்தது யாராக இருந்தாலும் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுக சாமி வழங்கிவுள்ள அறிக்கை ஏதோ அரசியல்வாதி கொடுத்துள்ள அறிக்கையை போல இருக்கிறது. உண்மை என்ன என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக தான் இந்த ஆலயமே அமைக்கப்பட்டது இந்த அறிக்கையை எதற்கு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு நிச்சயமாக செல்வார்கள். நீதிமன்றத்தில் இந்த ஆணைய அறிக்கை கண்டனத்திற்குள்ளாவற்கான வாய்ப்புள்ளது. மருத்துவர்கள் எந்த நேரத்தில் எது சரியானதோ அதைத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள் ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.