இந்த மனுக்கள் ஏன் விசாரிக்க படாமல் உள்ளது? உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்!

0
93

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார். அதாவது அவருடைய மரணத்தில் இருக்கக்கூடிய மர்மம் என்ன என்பதையும், அவருடைய மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என்று தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் உறுதிபட தெரிவித்து இருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் தமிழகத்தில் அவர் ஒரு சிம்மம் ஆகவே வலம் வந்தார் என்றால் அது மிகையாகாது, எதிர்க்கட்சியாக திமுக இருந்தாலும் அவரை விமர்சிப்பதற்கு சற்று தயங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் அவர் 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றவுடன் அடுத்தபடியாக வந்த தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற சமயத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே நடைபெற்றது என்றால் அது மிகையாகாது.

அப்படியிருக்க அவர் மரணம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு அவர் மரணத்திற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடடார். அது பொது மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும், அதற்காகவே அவருக்கு வாக்களித்து முதலமைச்சராக அமர வைத்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது..

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டுமென்றே அப்பல்லோ மருத்துவமனை தரப்பு தான் தாமதப்படுத்தி வருகிறது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அமைக்கப்பெற்ற ஆறுமுகசாமி ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது இந்த ஆணையத்தில் பலதரப்பினரும் ஆஜராகி தங்களுடைய தரப்பு சாட்சியத்தை அளித்திருக்கிறார்கள் இந்த நிலையில், முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தற்போது வரையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் இந்த ஆணையத்திற்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மருத்துவமனை தாக்கல் செய்த மனு நேற்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அந்த சமயத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பாக மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டால் விசாரணை முற்றுப் பெறாது. அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்படும் அடுத்த வாரத்தில் தனிப்பட்ட ஒரு சில பணிகள் உள்ளதால் இவ்வழக்கில் தன்னால் ஆஜராக இயலாத நிலை இருக்கிறது, ஆகவே தசரா விடுமுறைக்குப் பின்னர் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை அடுத்து தமிழக அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இதற்கு ஆட்சேபம் தெரிவித்து உள்ளார், இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த இரண்டு ஆண்டு காலமாக நிலுவையில் இருக்கின்றன. ஆகவே இந்த மனுக்களை விசாரணை செய்ய சிறிது நேரமே போதுமானதாக இருக்கிறது, இருந்தாலும் எதற்காக இந்த மனுக்கள் விசாரிக்க படாமல் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள இயலவில்லை விசாரணையில் வாதங்களை முன்வைக்க முன் தயாரிப்புடன் வருகை தரவேண்டும் என்று தெரிவித்து வாதிட்டு இருக்கிறார் துஷ்யந்த் தவே.

ஆறுமுகசாமி ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞ்ர் சேகர் நாப்தே இந்த வழக்கில் கிட்ட்த்தட்ட அனைத்தும் முடிந்து விட்ட்து புதிய வாதங்களை முன் வைக்க எதுவும் இல்லை அனைத்து வாதங்களும் முடிந்து விட்ட்து என தெரிவித்தார்.அத்துடன் ஆணையத்தின் விசாரணையும் ஒரு மாதத்தில் முடியும் நிலையில், உள்ளது என கூறியிருக்கிறார்.