Connect with us

Politics

கலைஞர் என்கிற வேங்கையின் ஒத்தை மகன் ஸ்டாலின் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!!

Published

on

கலைஞர் என்கிற வேங்கையின் ஒத்தை மகன் ஸ்டாலின் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!!

பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துறைகளும் இன்று மக்களால் பாராட்டப்படுவதற்கு கலைஞர் எனும் வேங்கையின் ஒத்தை மகன் ஸ்டாலின் தான் காரணம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisement

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ், அமைச்சராக பொறுப்பேற்றப்பின் தன்னிடம் வந்த 1541 கோப்புகளில் 1536 கோப்புகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாகவும், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த 130 அறிவிப்புகளில் 117 அறிவிப்புகளை செயல்படுத்தியுல்ளதாக கூறினார். பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்ல, அனைத்து துறைகளும் இன்று பாராட்டப்படுகிறது என்றால் அதற்கு காரணம், கலைஞர் என்கிற வேங்கையின் மகன் ஒத்தையா உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாரே முதலமைச்சர் ஸ்டாலின் தான் என கூறினார்.

 

Advertisement