மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தடைபட்ட வருமானம் தானாகவே வந்து சேரும் நாள்!!

0
131
#image_title

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தடைபட்ட வருமானம் தானாகவே வந்து சேரும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தடைபட்ட வருமானம் தானாகவே வந்து சேரும் நாள். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் கேட்டிருந்த கடன் உதவிகள் கண்டிப்பாக வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித இன்பம் குடிகொள்ளும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வருமானம் அருமையாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani