மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!

0
153
#image_title

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்.அயன‌ சயன ஸ்தானமாகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே அற்புதமான ஒற்றுமை காணப்படும். குடும்ப உறவு சுபிட்சமாக காணப்படும்.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் அதிகமாக இருக்க தான் செய்யும். உத்தியோகத்தில் பயண வாய்ப்புகள் மேம்படும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கை அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் சென்று வருவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும் மகிழ்வார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள் இன்றைய தினம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முக்கியமான சில பொறுப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செலவுகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani