மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

0
72

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்.அயன சயன ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். நிதி ஓரளவிற்கு அனுகூலமாக இருந்தாலும் செலவுகளும் வந்து சேரும்.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தொழில் மற்றும் வியாபாரம் அபிவிருத்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். சிலருக்கு தொழிலை வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு செலவுகள் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உங்கள் இல்லம் தேடி வருகை புரிவார்கள்.

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் ஆனந்தமாக காணப்படுவார்கள்.

நேற்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani