மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு அதிகரிக்கும் நாள்!

0
111
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு அதிகரிக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும் நாள். திடீரென எதிர்பாராத தனம் வந்து சேரும். குடும்ப உறவு அதிகமாக உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். வாழ்க்கைத் துணை வழி உறவுகள் மூலம் சில நன்மைகள் நடைபெறும்.

பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். வருமானம் வந்து சேர்வதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் வெகு சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் தன வரவு கிடைத்து மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத தன வரவு காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக்கி ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு தன வரவு ஒன்று வந்து சேரலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

author avatar
Selvarani