மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் அதிகரிக்கும் நாள் !

0
76
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் அதிகரிக்கும் நாள் !

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். இன்றும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

குடும்ப உறவு பிரச்சனையுடன் போகும். வாழ்க்கை துணைவழி உறவினர்கள் மூலம் சில பிரச்சனைகள் எழலாம். வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை வாடிக்கையாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் ஆகலாம். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சிறப்பான சூழ்நிலை வர வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது மிகவும் நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk