மேஷம் ராசி – இன்றைய ராசிபலன் !! சுப காரியங்கள் கைகூடும் நாள்!

0
89
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன் !! சுப காரியங்கள் கைகூடும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுப காரியங்கள் கைகூடும் நாள். களஸ்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள்.

குடும்ப உறவு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை உறவுகள் தொலைபேசி மூலம் சில நல்ல தகவல்களை தருவார்கள்.

பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் வருமானம் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்..

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் நண்பர்கள் உடல் ஆரோக்கியம் செய்ய ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு இனிய காரியங்கள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்த குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani