மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் போதும்!

0
80

மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமே மூட்டு வலி என்பது சாதாரணமாக வருகின்றது. அதற்கு காரணம் உடற்பயிற்சி மேற்கொள்ளாதது, உணவு முறைகள் போன்றவைகள் தான்.

மூட்டு வலியை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக மூட்டு வலி என்பது கால்சியம் சத்து குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. அதற்கு சிறந்த மருந்தாக வெங்காயம் இருக்கின்றது.

முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி விட்டு நன்கு சீவி கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சுக்கு பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். சுக்குப்பொடியில் கால்சியம் சத்தும், சுண்ணாம்பு சத்தும் நிறைந்துள்ளது. இவை எலும்புகளுக்கு அதிக அளவு வலிமை தரக்கூடியதாக உள்ளது. அரை ஸ்பூன் அளவிற்கு சுக்குப்பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்று பொருட்களையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய கடாயில் மூன்று டீஸ்பூன் அளவுக்கு கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நாம் கலந்து வைத்துள்ளதை சேர்த்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் மூட்டின் மீது தேய்க்க வேண்டும். அதன் பிறகு காட்டன் துணியால் பத்து போட வேண்டும். இதனை ஒரு மணி நேரம் வைத்திருந்தால் மூட்டில் ஏற்பட்டுள்ள வலிகள் நீங்கும்.

 

author avatar
Parthipan K