இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கின்றதா? ஒரு கைப்பிடி புதினா!

0
135
#image_title

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கின்றதா? ஒரு கைப்பிடி புதினா!

தற்போது அனைவரிடைய வீட்டிலும் வளர்க்கப்படும் செடிகளில் ஒன்றாக இருப்பது புதினா. இதனை தினம்தோறும் சமையலில் சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகின்றது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. புதினாவை யார் யார் சாப்பிட கூடாது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

இந்த புதினா இலையில் அதிக அளவு ஜீரண சக்தி உள்ளது. அதனால் இதனை தினந்தோறும் நம் உணவில் ஏதேனும் ஒரு வகையில் சேர்த்துக் கொள்வதனால் செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்றவைகள் குணமாகும்.

புதினா இலையினால் எண்ணெய் தயார் செய்யப்படுகின்றது. அந்த எண்ணையை நம் உடம்பில் எந்த இடத்தில் வலி இருக்கின்றதோ அதன் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும். உடனடியாகவே வலிகள் அனைத்தும் மறைந்துவிடும் என கூறப்படுகிறது. மேலும் இந்த புதினாவை ஆல்கஹால் தயாரிக்கும் பொழுது சிறிதளவு சேர்க்கின்றனர். புதினா இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை உடையது.

தற்போது மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் செரிமான பிரச்சனை ஏற்பட்டு ஒரு சிலருக்கு பேசும்பொழுது வாய் துர்நாற்றம் ஏற்படும். அவ்வாறு ஏற்படுபவர்கள் புதினாவை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்காக புதினா மாத்திரைகளையும் தயார் செய்யப்படுகின்றது.

அதுமட்டுமின்றி தலைவலி,குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு புதினா மருந்தாக செயல்படுகின்றது. மேலும் குடலிறக்கம்,பித்தப்பை, அடைப்பு உள்ளவர்கள் புதினா இலைனால் செய்யப்பட்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.

குறிப்பாக கல்லீரல் பிரச்சனை, குடலிறக்கம் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் அனைவரும் புதினாவால் செய்யப்பட்ட மாத்திரை அல்லது எண்ணெயை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு எடுத்துக்கொள்வது சிறந்தது.

மேலும் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தலைவலி, உடம்பு வலி ,வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஒரு நாளொன்றுக்கு 90 மில்லி கிராம் முதல் 120 மில்லி கிராம் வரையும் புதினாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

author avatar
Parthipan K