வைரலாகும் ஸ்வேதா டீச்சர்! யார் இவர்?

0
84

கொரோனா பொதுமுடக்க காரணமாக நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் துவங்குவதில் கால தாமதம் ஏற்ப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு நடத்தப்படாமலயே தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பள்ளிகள் திறக்கும் காலதாமதத்தை ஈடு செய்யும் வகையில் மாநிலங்கள் ஆன்லைன் மற்றும் தொலைகாட்சி வாயிலாக கல்வி கறிப்பிக்கும் முறையை ஊக்குவித்து வருகின்றன. அப்படி கேரள அரசின் கைட் விக்டர் சேனல் (Kite Victor Channel) எனும் அலைவரிசை தொலைகாட்சி மூலம் கடந்த ஜுன் 1ம் தேதியிலிருந்து பாடமெடுத்து வருபவர் தான் இந்த சாய் ஸ்வேதா.

இவர் கேரள மாநிலம் கோழிகோட்டிலுள்ள சோம்பா எல்பி (Chombala LP) எனும் பள்ளியில் 1ம் வகுப்பாரிரையையாக பணியாற்றி வருகிறார். இவர் பாடம் எடுக்கிறார் என்றார் சரியாக காலை எட்டு மணிக்கெல்லாம் தங்களது கணிப்பொறி அல்லது தொலைகாட்சி முன்பு மாணவர்கள் வகுப்பறையில் எப்படி இருப்பார்களோ அப்படி அமர்ந்து விடுகின்றனர். இவர் பாடம் எடுக்கும் முறைக்கு மாணவர்களின் பெற்றோர்களும் ரசிகர்களாகி விட்டனர்.

டிக் டாக்கிலும் கலக்கி வரும் ஸ்வேதா டீச்சரை பார்க்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு நம் மாநிலத்திலும் இப்படி ஒரு ஆசிரியை கிடைக்கமாட்டார்களா என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K