100 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துபவரா நீங்கள்! செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி!

0
86

100 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துபவரா நீங்கள்! செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி!

தற்பொழுது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தாலே மின் துண்டிப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர்கள் ஆண்டுக்கு 6 ஆயிரம் வரை பயனடையலாம் எனக் கூறியிருந்தனர். ஏனென்றால் அவர்களுக்கு மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

அதனையெல்லாம் விடியா அரசு  தற்பொழுது மறந்து விட்டு உடனடியாக மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டது. 200 யூனிட் உபயோகம் செய்பவர்கள் 55 ரூபாயும், 300 யூனிட் உபயோகம் செய்பவர்களுக்கு 145 ரூபாயும், 400  யூனிட் உபயோகம் செய்பவர்களுக்கு 295 ரூபாயும், 500 யூனிட் உபயோகம் செய்பவர்களுக்கு 310 ரூபாயும் விலையை உயர்த்தி உள்ளது. திமுக அரசு வந்தவுடன் சிலிண்டர் விலை, பால் பொருட்களின் விலை என அனைத்தும் உயர்ந்த நிலையில் தற்போது மின்சார கட்டணத்தையும் உயர்த்தி விட்டது.

பல தரப்பில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பி வரும் நிலையில்  தற்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்த பேட்டியளித்துள்ளார். 100 யூனிட்டுக்கும் கீழே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை. அதுமட்டுமின்றி குஜராத் போன்ற இதர மாநிலங்களில் உள்ள மின் கட்டணத்தை விட தமிழகத்தில் மின்சார கட்டணம் சற்று குறைவு தான் எனவும் தெரிவித்துள்ளார்.