நீங்கள் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களா? இந்த வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரூ 50 ஆயிரம் உதவித்தொகை!

0
187
Are you a student about to write competitive exams? Scholarship of Rs 50 thousand only for those who join this class!
Are you a student about to write competitive exams? Scholarship of Rs 50 thousand only for those who join this class!

நீங்கள் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களா? இந்த வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரூ 50 ஆயிரம் உதவித்தொகை!

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக இருக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் மூலமாக தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்தப் போட்டுத் தேர்வில் பங்கேற்க போதிய பயிற்சி பெறுவது மிக அவசியமான ஒன்றாக உள்ள நிலையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பொருளாதார ரீதியாக சிரமம் அடைந்து வருகின்றனர்.

அதனை கருத்தில் கொண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்களுடைய வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு நகர்ப்புறங்களில் தங்கி தனியார் பயிற்சி மையங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுகளுக்கு பயிற்சி பெற ஐம்பதாயிரம் ரூபாய்  உதவித்தொகை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.

அதுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தேர்வில் முதல் நிலை தேர்ச்சி பெற்று  முதன்மை தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K