டெலெக்ராமில் படம் டவுன்லோட் செய்பவர்களாக நீங்கள்? எச்சரிக்கை! பணம் பறிபோகும் ஆபத்து!!

0
301

டெலெக்ராமில் படம் டவுன்லோட் செய்பவர்களாக நீங்கள்? எச்சரிக்கை! பணம் பறிபோகும் ஆபத்து!!

டெலெக்ராமின் மூலம் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.

அதாவது அண்மைக்காலமாக டெலிகிராமில் நாம் படங்களையோ அல்லது சீரியல்களையோ டவுன்லோட் செய்து வருகிறோம்.இவ்வாறு படங்களையோ அல்லது சீரியல்களையோ டவுன்லோட் செய்ய நாம் பல்வேறு குரூப்புகளில் இணைகிறோம்.
இவ்வாறு நாம் டெலிகிராமில் டவுன்லோட் செய்யும் பொழுது நேரடியாக டவுன்லோடு செய்யும் ஆப்ஷன் வராமல் லிங்க் மூலமாக டவுன்லோட் பக்கத்திற்கு செல்ல வேண்டி இருக்கும்.இவ்வாறு செல்லும் இந்த லிங்கின் மூலம் சைபர் குற்றவாளிகள் நம் போனை எளிதாக ஹேக் செய்து விடுகின்றனர்.ஒருவேளை உங்கள் போன் ஹேக் செய்து விட்டால் எந்தவித மெசேஜ் மற்றும் ஓடிபி இன்றியும் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருட முடியும் என்று சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 50000 பேர் 95 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
எனவே படத்தை டவுன்லோட் செய்வதாக எண்ணி தெரியாத குரூப்புகளையோ அல்லது தேவையில்லாத லிங்குகளையோ கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

author avatar
Pavithra