இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

0
109

இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய உணவு வகைகளை சூடாக சாப்பிட வேண்டும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இக்காலங்களில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகும். சூடான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது.காலை வேலையில் அருகம்புல் சாறு,எலுமிச்சை,பூசணி, மணத்தக்காளி,வாழைத்தண்டு மற்றும் வல்லாரை ஆகியவற்றில் சாறு எடுத்து சூடாக காலையில் குடிக்க வேண்டும்.உளுந்து, கோதுமை ஆகியவற்றை ஊற வைத்து வடிகட்ட வேண்டும். பின்பு அதனை பருத்தி துணியால் மூடி வைக்க வேண்டும். அவ்வாறு மூடி வைத்தால் பயறு வகைகள் முளைத்து விடும். அவ்வாறு முளைத்த பயறு வகைகளுடன் தேங்காயை துருவிப்போட்டு சாப்பிடலாம். கேழ்வரகு கூழ், கோதுமை கஞ்சி ,அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றை சூடாக சாப்பிடலாம்.சூடான இட்லியை காலை உணவாக சாப்பிடலாம்.

 

மதிய வேலையில் அதிகளவில் கீரைகளையும் கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை சாப்பிடுவது நல்லது. சாப்பிடக்கூடிய உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும். அசைவ உணவுகளான மீன் ,முட்டை, இறைச்சி ஆகியவற்றை மதிய உணவாக சாப்பிடலாம். கோழிக்கறி சூப்,ஆட்டுக்கால் சூப் வைத்தும் குடிக்கலாம்.தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது நல்லது. மீன்களில் அதிக அளவு ஜிங்க் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். மாலை நேரத்தில் குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும் வேர்க்கடலை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இரவு வேலையில் இட்லி ,தோசை, சப்பாத்தி,இடியாப்பம், உப்புமா மற்றும் சேமியா ஆகியவற்றை இரவு உணவாக சாப்பிடலாம். ஐந்து முந்தரி பருப்பை அல்லது பாதாம் பருப்பை ஊறவைத்து அதனுடன் அரை கப் தேங்காய் துருவிப்போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்தால் இயற்கை பால் தயாராகி விடும். அதன்பின் பால் அருந்துவதற்கு பதில் இயற்கை பாலை பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு முன்பு பசும்பாலில் மஞ்சள் தூள்,மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஜலதோஷம் தொடர்பான பிரச்சனைகள் வராது.மேற்கூறிய உணவுகளை சரியான நேரத்தில்  உட்கொண்டு வந்தால் நாம் ஆயுள் முழுக்க கடைசி வரை ஆரோக்கியமாக வாழலாம்.

author avatar
Parthipan K