இந்த இலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? கைக்கால், மூட்டுவலி, நரம்புவலி அனைத்தும் சரியாகிவிடும்!

0
122

பெரியவர்கள் மூட்டுகளில் வீக்கமும் வலியும் இருந்தால் புளிய இலையை கொண்டுதான் வைத்தியம் செய்வார்களாம். அந்த அளவிற்கு புளியமரம் கடும் விஷம் கொண்ட ஜந்துக்கள் வாழும் இடமாக இருந்தாலும் அது கை கால் மூட்டு பகுதிக்கு சிறந்த மருத்துவமாக உதவுகிறது.
மூட்டுவலி வாதத்தால் வந்தாலும், வாய்வு குறைபாட்டால் வந்தாலும் சுளுக்கு ஏற்பட்டாலும் கால் மூட்டுகளில் ரத்தம் கட்டி வீக்கம் போன்றவை ஏற்படும் இதற்கு புளி இலை வைத்தியம் தான் கை கொடுக்கும் எப்படி எளிதாக இந்த வைத்தியத்தை எல்லோரும் செய்வார்கள் என்று பார்க்கலாம்.

1. முறை 1

முதலில் புளிய இலையை எடுத்துக் கொண்டு காம்பு நீக்கி அதில் உப்பு, கடுகு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். பின் அம்மி அல்லது உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். இந்த மசியலை லேசாக சூடு செய்து பொறுக்கும் சூட்டில் மூட்டு வீங்கி இருக்கும் இடத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து காய்ந்ததும் கழுவி விட வேண்டும் இவ்வாறு ஒரு வாரம் செய்தால் காலில் உள்ள சுளுக்கு இரத்தக்கட்டு வீக்கம் போன்றவை படிப்படியாக குணமடைந்து விடும்.

2. முறை 2

முதலில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை லேசாகச் சூடு செய்து கால்களில் வலி இருக்கும் இடங்களில் தடவி விடவும். அந்த இடத்தில் புளிய இலையை எடுத்து அதன் மேல் வைத்து லேசாகத் தட்டினால் ஒட்டிக்கொள்ளும். புளி இலைகள் எண்ணெயோடு கலந்து சருமத்தின் உள்ளே ஊடுருவும். எண்ணெய் உலர்ந்ததும் இவை சருமத்தில் இருந்து கீழே விழுந்துவிடும். இவ்வாறு இரண்டு வேளை காலை மாலை என தொடர்ந்து செய்து வந்தால் வலி குறையும்.

3. முறை 3

துணியை இலையை உருவி தனியாக காம்பு நீக்கி எடுக்கவும். அடுப்பில் மண் சட்டி வைத்து வேப்ப எண்ணெய் சேர்த்து லேசாக சூடானதும் புளிய இலைகளை சேர்த்து வதக்கவும். இளஞ்சூடாக இருக்கும் போதே இதை எடுத்து மூட்டுகளில் வீக்கம் இருக்கும் இடங்களில் நன்றாக அழுத்தி சுத்தமான துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும். தினமும் இரவு நேரத்தில் இதை செய்து வந்தால் ஒரு வாரத்தில் வீக்கம் குறைந்துவிடும்.

4. முறை 4

அதிகமாக நரம்பு வலியால் பாதிக்கப்படுபவர்கள் காம்பு நீக்கிய புளிய இலையை எடுத்து இட்லி பானையில் அவிக்க வேண்டும். அதை ஒரு மெல்லிய துணியால் சுற்றி வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அதன் பின் அதை அப்படியே வலி இருக்கும் இடத்தில் கட்டி விட வேண்டும். இதனை ஒரு நாள் இடைவெளியில் தொடர்ந்து 10 முறை செய்து வரும் பொழுது நரம்பு வலியும் சரியாகும்.

புளிய இலையை வைத்து ஏகப்பட்ட வைத்தியம் உள்ளது இதனை வெளிப்புற போச்சு என்பதால் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை சருமத்தை பாதிக்காமல் வலியை நீக்கும் நிவாரணியாக இருக்கும்.

author avatar
Kowsalya