அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க! 

0
166
#image_title

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க! 

தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் இந்த காலத்தில் சில்லென்ற உணவுகளை சாப்பிடுவதற்கு நாம் நினைப்போம். அந்த வகையில் கோடை காலத்திற்கு ஏற்ற பானங்களில் ஒன்று மோர்.

கோடைகாலத்தில் நாம் தினமும் மோர் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களினால் விளையும் நன்மைகள்  என்ன என்பன பற்றி பார்ப்போம்.

ஏராளமான ஊட்டசத்துக்கள் மோரில் இருக்கின்றது. உடல் ஆரோக்கியதை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் இதில் அதிகம் உள்ளது. அதுவும்  இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து குடித்தால், ருசியாகவும் நல்ல மணத்துடனும் இருக்கும். இதை தினமும் ஒருமுறை குடித்தால், பல்வேறு நன்மைகள் கிடைத்து உடல் ஃபிட்டாக இருக்கும்.

1. நாம் சாப்பிடும் உணவு வகைகள் நிறைய இருக்கும். அதில் சில உணவு வகைகளில் காரணம் மற்றும் எண்ணெய் அதிகமாக இருக்கும். இது போன்ற உணவு வகைகளை நாம் சாப்பிடும் பொழுது நெஞ்சு எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படும். இந்த சமயத்தில் நாம் மோர் குடிக்கும் பொழுது மோரில் உள்ள லாக்டிக் அமிலம் ஆனது இந்த பிரச்சனைகளை உடனடியாக சரி செய்து விடும்.

2. நமது உடலானது சாதாரண நாட்களில் கூட அதிக வெப்பத்துடன் காணப்படும். அதுவும் கோடை காலத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். அதனால் கோடைகாலத்தில் தினமும் மோர் குடிப்பதால் உடல் வெப்பநிலையை சமப்படுத்தி குளிர்ச்சியாக வைக்க உதவும்.

3. பொதுவாக நிறைய பேருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. இவர்கள் தினமும் மோரினை குடித்து வந்தால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும். இவர்கள்  தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பது ஆரோக்கியமானது.

4. தினமும் மோர் குடிப்பவர்களுக்கு முகத்தில் உள்ள எண்ணெய் பசை, மற்றும் கிருமிகளை நீக்கி இயற்கையாக பளபளப்பாக வைத்திருக்க உதவும். அது மட்டும் இல்லாமல் கோடை காலத்தில் வரும் பருக்களையும் வராமல் தடுக்கிறது.

5. நமது உடல் வியர்வையை வெளிப்படுத்துவதின் மூலம் எலக்ட்ரோலைட்டுகளை இழக்க நேரிடும். அதுவும் கோடைகாலத்தில் வியர்வை அதிகமாக இருப்பதால் அதிக எலக்ட்ரோலைட்டுகளை இழக்க வேண்டும். இதை தடுக்க தினமும் மோர் குடித்து வந்தால் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீண்டும் பெற செய்து உடலை நன்றாக இயங்க வைக்கும்.