குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!..

0
102

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!..

இந்திய ரயில்வே எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் முன்பதிவு வசதி உள்ள நிலையில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.இதில் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், ஏசி கொண்ட பெட்டிகள் அடங்கும்.மேலும் இந்த ரயிலில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி முன்பதிவு இல்லாத 1முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் குழந்தைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் பரவியது.இதை பற்றி விளக்கம் அளித்தார் ரயில்வே அமைச்சகம்,

ரெயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் இல்லை என ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தி கூறியுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் மார்ச் 6, 2020 தேதியில் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக ரயிலில் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கென ஒரு தனி படுக்கை வேண்டும் என பட்சத்தில் ஒரு நபருக்கு ஈடான கட்டணத்தை செலுத்த வேண்டும்.அப்போது தான் அந்த படுக்கையை ஒதுக்க முடியும்.
இந்த விதிகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தற்போது போல ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை கேட்ட ரயில் பயணிகள் அவர்களின் குழப்பத்திலிந்து மீண்டும் தெளிவான நிலைக்கு திரும்பினர்.

author avatar
Parthipan K