அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்!

0
178
Poovai Jaganmurthi
Poovai Jaganmurthi

அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கவுதம் நகர் பகுதியில் சோகனூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன், சூர்யா, மதன், சவுந்தர் உள்ளிட்டோர் நேற்று முன்நாள் (7ம் தேதி) மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த சிலர் மது பாட்டில்களால் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்தவர்களை திருத்தணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பீர் பாட்டிலால் குத்தப்பட்ட அர்ஜூனன், சூர்யா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், அரசியல் கட்சிகள் சில, இதனை திசை திருப்பி, கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

தாக்குதல் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தல் முன்பகை காரணமாக நடந்திருப்பதாகவும், இதற்கு பாமக தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழகம் முழவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புரட்சிப் பாரதம் கட்சியின் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் அரசியல் காரணங்களுக்காக நடக்கவில்லை என்றும், சாதி மோதலால் ஏற்பட்டதல்ல என்றும் தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் மது குடிக்கும் போது ஏற்பட்ட மோதலால் கொலை நடந்திருப்பதாகவும், தேர்தல் பிரச்சனை இல்லை, சாதிய மோதலாக மாற்ற முயற்சிக்காதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜெகன் மூர்த்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வருவது அம்பலமாகியுள்ளதால், அவரது கட்சியினர் உண்மை தெரிந்தும் எதிர்த்து பேச முடியாமல் தவித்து வருகின்றனர்.

மது அரக்கனால் ஏற்பட்ட இந்த பிரச்சனையை, சாதிய பிரச்சனையாக மாற்றி, ஒரு கட்சியை குறிவைத்து அரசியல் செய்ய முயற்சிப்பதா! என்றும் சில விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.