கும்பம் – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!

0
86
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைப்பதால் பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தனி மரியாதை உடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk