ஆப்லயும் ஆப்பா… மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!!

0
121

ஆப்லயும் ஆப்பா… மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!!

11 ஆப்களில் மிகவும் ஆபத்து மிக்க ஜோக்கர் மால்வேர் வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கின்றது. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாகவே மால்வேர் எனப்படும் ஒரு வைரஸ் மேம்பாடும் அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில் ஜோக்கர் மால்வேர் மீண்டும் இணையத்தை தாக்க வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மால்வேர் வைரஸ் ஸ்மார்ட்போன் பயனர்களை பாதிக்கும் திறன்களை கொண்டுள்ளது.இவைகள் சேமித்து வைக்கும்முக்கிய தகவல்களையும், நமது எஸ்எம்எஸ் மற்றும் கான்டெக்ட் நம்பர்களை முழுவதுமாக திருடுகிறது.

அத்துடன் அவை தனிப்பட்ட தரவுகளை திருடுகின்றன மற்றும் பிற பயன்பாடுகளை பார்க்கின்றன. சில சமயங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பற்றிய விவரங்களையும் கூட அவைகள் திருடுகின்றன.இந்த மால்வேர் வைரஸானது, ப்ளே ஸ்டோரில் மொத்தம் பதினொரு ஆண்ட்ராய்டு ஆப்களில் பரவியிருப்பதை சைபர் பாதுகாப்பான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

அவைகளாவன D elux keyboard, Read scanner, Saying Message, Font Style Keyboard, Comply QR Scanner, Free Affluent Scanner, PDF Photo Scanner, PDE Converter Scanner, Translate Free, Private Message, Print Scanner போன்றவைகளில் இந்த மால்வேர் வைரஸ் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் இதில் ஒரு ஆப் பயன்படுத்தினால் கூட உடனடியாக அதனை டெலிட் செய்வது மிகவும் நல்லதாகும்.

author avatar
Jayachithra