உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறக்கட்டளைக்கு சிஇஓ ஆக நியமிக்கப்பட்டவர் – யார் தெரியுமா?

0
72

உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறக்கட்டளைக்கு சிஇஓ ஆக ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டார். இவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். அதுமட்டுமின்றி இவரே இந்த அறக்கட்டளையின் முதல் சிஇஓ ஆவார்.

சுகாதார நிபுணர் அனில் சோனி என்பவரே உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறக்கட்டளையின் முதல் சிஇஓவாக நியமிக்கப்பட்டவர் ஆவார். சுகாதாரம் சம்பந்தப்பட்ட உலகளாவிய சிக்கல்களை எதிர்கொள்ள உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளுடன் இணைந்து செயல்படும் நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த அறக்கட்டளை ஆனது 2020 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளையின் தலைமைச் செயலகம் சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஜெனீவா என்கின்ற நகரில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதன் சி இ ஓ பதவிக்கு நியமிக்கப்பட்ட இந்த அனில் சோனி என்பவர் வருகின்ற ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி தனது சிஇஓ பொறுப்புகளை ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Parthipan K