இந்த இலையின் சாற்றை தடவினால் போதும் தேமல் முற்றிலும் குணமாகும்!!

0
104
#image_title

இந்த இலையின் சாற்றை தடவினால் போதும் தேமல் முற்றிலும் குணமாகும்!!

தேமல் குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது. மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி.

தேமல் வர காரணம் சுத்தமாக இல்லாததும் ஒன்று. இந்த பாதிப்பு வியர்வை அதிகமாக உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு, ஏதேனும் ஒரு காரணத்திற்காக நீண்ட நாட்கள் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு , நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தேமல் வரும். இதனை இயற்கையான முறையில் சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. துளசி
2. மஞ்சள்
3. எலுமிச்சை பழம்
4. கீழாநெல்லி
5. தொட்டால் சுருங்கி
6. குப்பைமேனி
7. கருஞ்சீரகம்
8. தேங்காய் எண்ணெய்

செய்முறை:

துளசி, கீழாநெல்லி தொட்டால் சுருங்கி, குப்பைமேனி போன்ற இலைகளை சமமாக எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள் ஒரு சிட்டிகை, எலுமிச்சை பழம் சாறு சிறிதளவு, கருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை தேமல் உள்ள இடங்களில் பூசி வருகையில் தேமல் முற்றிலும் குணமாகும். இந்த பொருட்கள் தினமும் கிடைக்காது என்ற நிலையில் இதனை எவ்வாறு நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

அரைத்த கலவையை தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். கலவையில் உள்ள நீர் கொதித்து சுண்டி வரும் வரை மிதமான சூட்டில் காய்ச்சவும். காய்ச்சி எண்ணெயை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டில் சேர்த்துக் கொள்ளவும். இதனை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த எண்ணையை தேமல் உள்ள இடங்களில் தடவி வருகையில் தேமல் முற்றிலும் குணமாகும்.

 

author avatar
Selvarani