+2பாஸாயிட்டிங்களா அப்படின்னா இது உங்களுக்கான செய்தி தான்! உயர் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
77

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 27 ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் விண்ணப்பம் செய்ய தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.www.tngasa.in என்ற இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், இந்த வருடத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.76 சதவீதமாகும்.

இப்படியான சூழ்நிலையில், 12ம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் இணையதளங்களில் விண்ணப்பம் செய்யலாம் என்று உயர் கல்வித்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கின்ற இளம் கலை மற்றும் இளம் கணிதவியல், அதோடு பிபிஏ, பிசிஏ, உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலமாக இன்று முதல் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 7ஆம் தேதி வரையில் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்றும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.