எப்பேர்ப்பட்ட பாத வெடிப்பும் 2 நாட்களில் சரியாகிவிடும்!! இதை ட்ரை பண்ணுங்க!!

0
37

எப்பேர்ப்பட்ட பாத வெடிப்பும் 2 நாட்களில் சரியாகிவிடும்!! இதை ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் பாத வெடிப்பு. சில பேருக்கு குதிங்காலில் வெடிப்புகள் காணப்படும். இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் இந்த வெடிப்புகள் பெருசாகி அதன் வழியாக கிருமிகள் உள்ளே சென்று ரத்தத்தில் கலக்கும். இந்த பதிவில் பாத வெடிப்பை எவ்வாறு சரி செய்வது என்பது மட்டுமல்லாமல் சில பேருக்கு இருக்கக்கூடிய நகச்சொத்தை, நக அழுக்கு, நகப் புண்கள் ஆகியவற்றை சரி செய்யக்கூடிய ஒரு தீர்வையும் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

செய்முறை:
முதலில் வெடிப்புகளில் இருக்கக்கூடிய கிருமிகளை நீக்க வேண்டும் அதற்காக ஒரு டப்பில் மிதமான சூட்டில் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டு மற்றும் அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு பேக்கிங் சோடாவையும் சேர்த்து தண்ணீரில் நன்றாக கலக்கி கொள்ளவும். இந்த தண்ணீரில் பாதத்தை ஐந்து நிமிடங்களுக்கு மூலிகை படி வைக்க வேண்டும் இவ்வாறு செய்வதனால் பாத வெடிப்பில் இருக்கக்கூடிய கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

அடுத்ததாக உப்பு தாளை (sand paper)எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தாளை சிறிதளவு கட் செய்து கையில் பிடிக்கும் படி வைத்து பாதத்தில் வெடிப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளில் தேய்க்க வேண்டும் இவ்வாறு தேய்க்கும் போது வெள்ளை வெள்ளையாக வெடிப்புகளில் இருக்கக்கூடிய கிருமிகள் அனைத்தும் வெளியேறும். இவ்வாறு இதை தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு செய்து வர பாத வெடிப்புகள் நிரந்தரமாக குணமாகும். அதாவது வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருந்தால் இரண்டு நாட்களிலேயே சரியாகிவிடும் அல்லது மிகவும் வெடித்த நிலையில் இருந்தால் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு செய்ய வேண்டும்.

இந்த உப்பு தாளை கொண்டு பாதங்களில் நன்கு தேய்த்து பிறகு, மெழுகுவர்த்தியில் இருக்கக்கூடிய மெழுகை சிறிதளவு எடுத்து சூட்டில் உருக்கி அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை சேர்த்து கலக்கி இந்த வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி தூங்கி விடவும். இவ்வாறு செய்வதனால் பாத வெடிப்புகள் மூன்று அல்லது நான்கு நாட்களில் குணமடையும். இந்த மெழுகை தொடர்ந்து பாத வெடிப்புகளில் தடவி வர வெடிப்புகள் நிரந்தரமாக குணமடையும்.8

author avatar
CineDesk