ரகசிய சந்திப்பில் கோட்டை ஏறும் லஞ்ச ஒழிப்புத்துறை! திமுக-வை விளாசும் மாஜி அமைச்சர்!

0
112
Anti-corruption department climbing the castle in a secret meeting! Ex-minister slams DMK!
Anti-corruption department climbing the castle in a secret meeting! Ex-minister slams DMK!

ரகசிய சந்திப்பில் கோட்டை ஏறும் லஞ்ச ஒழிப்புத்துறை! திமுக-வை விளாசும் மாஜி அமைச்சர்!

அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொழுது அதில் சி.வி சண்முகம் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.

அதில், லஞ்ச ஒழிப்புத்துறை என்பது தன்னிச்சையாக சட்டத்தின் கீழ் இயங்கக்கூடிய அமைப்பு என்பதை தற்போது உள்ள ஆளும் கட்சி மாற்றி அமைத்துள்ளது. அதனின் முதல் படியாக டிஜிபி கந்தசாமி அவர்களை தலைமை ஆணையராக நியமித்து இவர்களுக்கு ஏற்றவாறு காய் நகர்த்திவருகின்றனர்.

மேலும் லஞ்ச ஒழிப்பு துறையின் தலையாயப் பணி என்பது ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் ஆனால் தற்பொழுது உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை ஆனது ஆளும் கட்சி சொல்வதைக் கேட்டு தலையாட்டி வருகிறது.

அந்த வகையில் அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது பொய் ஊழல் வழக்குகளை போட்டு சிக்க வைப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதேபோல திமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்கை இழுத்தடித்தும் வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அதிமுக ஆட்சி அமைச்சர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் அவர்களுடைய நெருங்கிய நண்பர்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் தனியாக அழைத்து மிரட்டி வருவதும்  தற்பொழுது வழக்கமான ஒன்றாக உள்ளது.

அதுமட்டுமின்றி மாஜி அமைச்சர்கள் மீது வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக முதல்வரை சந்தித்து அவரின் ஆலோசனை கேட்டு அதன்படி வழக்குகளை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் முழுக்க முழுக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஆனது ஒரு பட்சமாகவே செயல்படுகிறது என்று சிவி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.