ஒட்டகத்தில் ஊர்வலம் வந்த மணமகன் கையில் சிஏஏ எதிர்ப்பு பதாகை: கேரளாவில் பரபரப்பு

0
96

கேரளாவில் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மணமகன் ஒருவர் நூதனமாக போராட்டம் நடத்தியது என்ற அந்த பகுதியில் உள்ளவர்களை பரபரப்பில் ஆழ்த்தியது

திருமணம் நடக்கவிருக்கும் மண்டபம் இருக்கும் பகுதிக்கு 20 கிலோ மீட்டர் ஓட்டகத்தில் வந்த மணமகன் கையில் சிஏஏவுக்கு எதிரான பதாகைகளை காண்பித்துக் கொண்டு வந்தார். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். மணமகனுடன் அவருடைய நண்பர்களும் ஒட்டகத்தில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மணமகனும் அவரது நண்பர்களும் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டவாறு 20 கிமீ ஒட்டகத்தில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களாகவே கேரளாவில் சிஏஏவுக்கு எதிராக பல இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சி அமைப்புகள் போராட்டம் செய்து வரும் நிலையில் ஒட்டகத்தில் நூதனமான முறையில் மணமகன் திருமணத்தன்று செய்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மேலும் சில இளைஞர்கள் தங்களுடைய திருமண தினத்தன்றும் இதேபோல் ஒட்டக ஊர்வலம் வர முடிவு செய்துள்ளனர்.

மேலும் திருமணம் முடிந்த பின்னர் மணமகள் கையில் சிஏஏ சட்ட நகல் ஒன்றை கொடுத்து சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மணமகளிடமும் மணமகன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
CineDesk