சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு!

0
68
Another death at IIT Chennai campus! Theatrical Pakir incident! Minister to visit and inspect!
Another death at IIT Chennai campus! Theatrical Pakir incident! Minister to visit and inspect!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு!

சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது இவ்வாறு கூறினார். சென்னை ஐஐடி வளாகத்தில் 45  நாய்கள் இறந்துள்ளதாக வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஐஐடி வளாகம் 617 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் இந்திய அளவிலேயே தொழிற் கல்வி நிறுவனங்களில் முதன்மையானதாக விளங்கி வருகிறது. 2020 ஆண்டு அக்டோபர் மாத கணக்கெடுப்பின்படி 188 நாய்கள் இந்த வளாகத்தில் இருந்துள்ளன. தன்னார்வலர்களால் நாய்கள் வளர்த்து பாதுகாக்கும் பணியை ஐஐடி நிர்வாகம் ஏற்று, மேலும் கண்காணிக்கும் பணியை ஒரு தனி குழு அமைத்து மாதந்தோறும் கவனித்து வருகிறது.

இந்த வளாகத்தில் மட்டும் 10600 சதுர அடியில் இரண்டு கொட்டகைகளை அமைத்து 9 நிரந்தர பணியாளர்களை கொண்டு செல்லப் பிராணிகளுக்கான, தேவையான உணவு, பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டில் மட்டும் 56 நாய்கள் இழந்துள்ளன. வெளியில் இருந்து வளர்க்கிறேன் என்று கேட்டவர்களுக்கு 29 நாய்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதற்கான பதிவுகளையும் தற்போது கேட்டுள்ளோம். ஐம்பத்தி ஆறு நாய்கள் தற்போது இறந்துள்ளன. அதற்கான காரணம் என்னவென்று கேட்ட போது, நிர்வாகத்திடம் இருந்து உடல் நோய் காரணமாகவும், முதுமை நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக அதில் ஒரு நாயின் உடல் மட்டும் உடற்கூராய்வு செய்ய கேட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் காரணமாக உடற்கூறு ஆய்வு முடிந்து முடிவுகள் வந்த பிறகே இது குறித்த உண்மைத்தன்மை தெரியவரும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.