மேலும் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது! மூன்றாவது நாளாக தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்!

0
91

சென்ற சனிக்கிழமை அன்று நள்ளிரவில் வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை மீறி மீன் பிடித்ததாக தெரிவித்து 43 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் எல்லோரும் ராமேஸ்வரத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட எல்லோரையும் இந்த மாதம் 31ம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைக்குமாறு இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த மேலும் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இருக்கிறார்கள். இவர்கள் ராமேஸ்வரம் அருகில் இருக்கின்ற பாம்பன் பகுதியைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்று இரவு யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த மேலும் 14 தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று அந்த நாட்டு கடற்தொழில் அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இவர்களும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

அவர்கள் பயணம் செய்த இரண்டு படகுகளும், பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இரவு 10 மணி அளவில் இவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்று கைது செய்யப்பட்ட 14 பேருடன் சேர்த்து கடந்த மூன்று தினங்களில் மட்டும் இலங்கை கடற்படையின் காரணமாக, தமிழக மீனவர்கள் 69 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையில் தமிழக மீனவர்கள் தங்களுடைய கடற்பரப்புக்குள் வந்து சின்னஞ்சிறு மீன் குஞ்சுகளையும் இழுவைப் படகுகளை கொண்டு அள்ளிச் செல்கிறார்கள். இதன் காரணமாக, மீன் வளம் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக மீனவர்கள் தரப்பில் சொன்னாலும் இலங்கை தமிழர் கட்சிகள் தரப்பிலும், அரசு தரப்பிலும், பலமுறை எடுத்து தெரிவித்தாலும் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்று இலங்கை தமிழ் மீனவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களின் படகு மீது தமிழக மீனவர்கள் கல்வீசி தாக்கி இருக்கிறார்கள். என்றும் அதில் செல்வரத்தினம் மோகன்ராஜ் என்பவரின் படகு சேதமடைந்தது எனவும் மூன்று மீனவர்களின் வலைகளை தமிழகத்தின் இழுவை படகுகள் அருள் பிரிந்துவிட்டனர் மீதம் இருக்கின்ற அவரை காப்பாற்றுவதற்காக சேதமான வலைகளை எடுத்துக் கொண்டு கரை திரும்பியதாகவும் வடமராட்சி கடல் தொழிலாளர் அமைப்பின் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு இருக்கிறார்கள்.