Connect with us

Cinema

அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு.!!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

Advertisement

இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி  தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

இந்நிலையில், கடந்த அக்டோபர் 14ஆம் தேதி வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், அண்ணாத்த திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது.

Advertisement

ரஜினியின் திரைப்படத்திற்கு பெரும்பாலும் யு சான்றிதழ் தான் கிடைக்கும். ஆனால் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனையடுத்து அண்ணாத்த திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசரில் கூட அதிரடி காட்சிகள் நிறைந்ததாகவே காணப்பட்டது.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement