Connect with us

Cinema

அண்ணாத்த திரைப்படத்திற்கு உதயநிதி வைத்த ஆப்பு.!! ஆடிப்போன திரையரங்கு உரிமையாளர்கள்.!!

Published

on

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

Advertisement

அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் வீடியோ, டீசர் மற்றும் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி  தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டிருப்பது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்ணாத்தா திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் முதல் இரண்டு வாரங்கள் திரையரங்குகளில் வரும் வசூலில் 75 சதவீதத்தை தங்களுக்குத் தர வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது‌. இது திரையரங்கு உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், இதற்கு முன் இது நடைமுறையில் இல்லாத ஒன்று. விஜய் படங்களுக்கு முதல் வார வசூலில் 60 லிருந்து 65 சதவீதமும், இரண்டாவது வார வசூலில் 30 லிருந்து 35 சதவீத பங்கும் தரும் நிலையில், அண்ணாத்த திரைப்படத்திற்கு இரண்டு வார வசூலில் 75 சதவீதத்தை தரவேண்டுமென ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கண்டிஷன் போட்டுடிருப்பது திரையரங்கு உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.‌

Advertisement